/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/parvai_119.jpg)
களங்கப்பட்ட அரசு! திராவிட இயக்க தமிழர் பேரவை, புறநகர் மாவட்டச் செயலாளர், மதுரை.
2019, ஏப்.06-09 இதழ்:
தேர்தல் செய்திகளை மட்டுமே முன்னிலைப்படுத்தி வரும் இந்த தருணத்திலும் கடந்த இதழ் பல செய்திகளை உள்ளடக்கியதாக -கவனிக்கத்தக்கதாக இருந்தது.
பொள்ளாச்சி விவகாரம் ஆகட்டும், நிர்மலாதேவி வழக்காகட்டும் ஆளும் ஆதிக்கத்தை துணிச்சலோடு எதிர்ப்பதில் நக்கீரனை விட்டால் ஆளில்லை.
ரஃபேல் புத்தகத் தடையையும் அதை உடைத்த கதையையும் கவர் செய்திருந்தது அருமை. தேர்தல் ஆணையத்தின் முகமூடியை பா.ஜ.க. அணிந்துகொண்டு விரட்டியதையும், மக்களிடம் ரஃபேல் புத்தகம் சென்ற வேகத்தையும் அழகாக விவரித்திருந்தது அந்தக் கட்டுரை.
அ.தி.மு.க.வின் பணப் பட்டுவாடாவை முன்னரே மோப்பம் பிடித்திருப்பது நக்கீரனுக்கே உரித்தான புலனாய்வுத் திறமை.
தெறிகள் களத்தில் தென்சென்னை, திருச்சி, திருப்பூர், தூத்துக்குடி, இராமநாதபுரம், ஆம்பூர், நாமக்கல் மற்றும் ஆரணி தேர்தல் களநிலவரத்தை தெளிவாகப் படம் பிடித்துள்ள நிருபர் குழுவினருக்கு வாழ்த்துகள்.
ஊடகம் வியாபாரமாகிவரும் தற்போதைய சூழ்நிலையில் தங்களின் பணி மெச்சக்கூடிய ஒன்றாகத் திகழ்கிறது. பொள்ளாச்சி விவகாரத்தில் உண்மைக் குற்றவாளிக்கு கடந்த நான்கு ஆண்டுகளாக அடைக்கலம் கொடுப்பதும், அவர்களை அம்பலப்படுத்தியதற்காக ஆசிரியர் நக்கீரன்கோபால் அவர்களை குற்றவாளிபோல மிரட்டுவதன் மூலம் மேலும் மேலும் களங்கத்தை இந்த அரசு தன்மேல் வாரி பூசிக்கொள்கிறது.
இந்த தருணத்தில்... வாசகர்கள் மட்டுமல்ல, தமிழக மக்களும் என்றென்றும் நக்கீரனுக்கு துணையாக நிற்கவேண்டும்.
_______________
வாசகர் கடிதங்கள்!
அக்கா நீங்க வாங்க!
தேர்தல் பரப்புரையில் பட்டாசு, சால்வைக்கு நோ சொன்ன வேட்பாளர் தமிழச்சி அக்காவின் தனித்துவ அரசியலை நினைத்தால், மகிழ்ச்சியில் உள்ளம் பூரிபோல உப்புகிறது. டிராபிக்கை உருவாக்குகிற அரசியல் தலைவர்கள் மத்தியில், வாகன நெரிசலுக்கு தாம் காரணியாகிவிடக்கூடாது என்கிற இவரைப் போன்றவர்களும் அரசியலுக்கு வரட்டுமே!
-ஆர்.குமரகுரு, சேந்தமங்கலம்.
படைப்பே பாடமாக!
மரணம் கடந்த இயக்குநர் மகேந்திரனின் சாதனைப் படைப்புகள் வரும் காலத்தில் நிகழப்போகும் ஜனனத்துக்குமான திரைப்பட பாடமாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இயக்குநரை கவர்ந்தவர்களை சுருங்கச் சொல்லி துக்கத்தைப் பகிர்ந்துகொண்டுவிட்டீர்கள்.
-எஸ்.பிரபு, கடலூர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2019-04-12/parvai-t.jpg)